
மனைவியை தாக்கி தீ வைத்து கொன்ற கணவனுக்கு மரணதண்டனை
மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு மரண தய்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தனது மனைவியை தாக்கி அறையொன்றில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சம்வம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
