மனைவியை கொன்று மூளையை சாப்பிட்ட கணவன்!
உலகில் சில நபர்கள் மிக மோசமான மனநிலையில் சைக்கோத்தனமான செயல்களில் ஈடுபடுவதை நாம் கேள்விபட்டிருப்போம். அப்படித்தான் மெக்சிகோவில் ஒரு சைக்கோ நபர் தன்னை சாத்தான் வழிபாட்டாளர் என்று கூறி தனது மனைவியை நரபலி கொடுத்து, அந்த பெண்ணின் மாமிசத்தை சாப்பிட்டுள்ளார்.
மெக்சிகோவின் ப்யூப்லா என்ற பகுதியை சேர்ந்தவர் அல்வாரோ (32 வயது). இவரது மனைவி மரியா. இந்த இருவருக்கும் கடந்தாண்டு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. மரியாவுக்கு ஏற்கனவே இருந்த உறவு மூலம் 5 குழந்தைகள் உள்ளனர். கட்டுமான தொழிலாளரான இவர் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு காலம் கூட ஆகாத நிலையில், இவர் தனது மனைவியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
மரியாவின் மகள்களை இவர் பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது. இவரின் செயல்களை தாங்க முடியாமல் மரியாவின் இரு மகள்கள் தாய் வழி பாட்டி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த மாதம் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.
தனது மனைவியை கொலை செய்த இவர்இ அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்துள்ளார். மனைவி மரியாவின் மூளையை நர மாமிசமாக சாப்பிட்டுள்ளார். அத்துடன் மனைவியின் மண்டை ஓட்டை சிகரெட் ஆஷ் டிரேவாக பயன்படுத்தியுள்ளார்.
இந்த கொடூரக் கொலை நடந்து இரண்டு நாட்கள் கழித்து மரியாவின் மகளை அழைத்து அவரை கொன்றுவிட்டேன் என ஒப்புக்கொண்டுள்ளார். தகவல் அறிந்த பொலிசார் அல்வாரோவை கைது செய்தனர். சாத்தானின் கட்டளையை ஏற்று தான் இந்த கொலையை செய்ததாக அல்வாரோ தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்