
மனைவியை கொன்று புதைத்த இளைஞன் வழங்கிய வாக்குமூலம்
முல்லைத்தீவு நீராவிப்பிட்டி பகுதியில் தனது மனைவியை கொலை செய்து புதைத்ததாக 23 வயதுடைய இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி முள்ளியவளை நீராவிபிட்டி பகுதியில், 22 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பெண் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு குமரபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரொருவரை திருமணம் புரிந்திருந்தார்.
இந்நிலையில் , குறித்த பெண்ணிற்கு கடந்த 21 ஆம் திகதி அவரது தாய் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்தார்.
தொலைபேசி அழைப்பிற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, அவர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, தமது மகள் வீட்டில் இல்லாததை அவதானித்த தாய், அது தொடர்பில் முள்ளியவளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தொலைபேசி அழைப்பிற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, அவர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, தமது மகள் வீட்டில் இல்லாததை அவதானித்த தாய், அது தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தனது மனைவியை செய்து விட்டு, கொலையை தொடர்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சனிக்கிழமை (அக்டோபர் 21) இரவு தனது மனைவியைக் கொலை செய்து பின்னர் அவரது சடலத்தை அவர்களது வீட்டு முற்றத்தில் புதைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
