மனைவியைத் தாக்கி காயப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மனைவியைத் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த மனைவியும் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று மதுபோதையில் தனது மாமனாரின் வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில், வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை உடைத்துச் சேதப்படுத்தி மனைவியை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர், காயமடைந்த மனைவி இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்