
மனைவியின் தங்கையுடன் விடுதிக்கு சென்ற அத்தானை தேடும் பொலிஸார்
ஹலவத்த பகுதியில் நேற்று முன் தினம் பிற்பகல் மனைவியின் இளைய சகோதரியை விடுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள 11ஆம் தர பாடசாலை மாணவியே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவியின் சகோதரி திருமணமாகி ஹலவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், மாணவி தனது அக்காவின் கணவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அந்த உறவின் காரணமாக சந்தேக நபர் மாணவியை விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
