
மத்ரசாவில் கல்வி கற்கும் மாணவனை காணவில்லை
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியில் மசூட் அஸ்மட் (வயது 15) எனும் மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் அநுராதபுர ஈமானியா அறபுக் கல்லூரியில் கற்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவன் கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் அறபு மத்ரசாவில் இருந்து 10.05.2024 அன்று ரொட்டவெவ கிராமத்துக்கு வருகை தந்திருந்த நிலையில், 16.05.2024 அன்று காணாமல் போயுள்ளதாகவும், 18.05.2024 ந் திகதி அன்று தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் மொறவெவ பொலிஸில் காணாமல் போன மாணவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
