மத்திய மலைநாட்டில் இரவு நேரங்களில் அதிகமான பனிமூட்டம்

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தொடர்ந்து மிகவும் வறண்ட காலநிலை மற்றும் இரவில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.

இரவு நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பனிமூட்டம் காணப்படுவதால் எதிர்திசையில் செல்லும் வாகனங்களை பார்க்க முடியாதவாறு அவ்வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்