மது அருந்த பணம் தர மறுத்த தாய்: மின்சார தூண் மீது ஏறிய மகன்

இந்தியாவின் ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை மது வாங்குவதற்கு தாய் பணம் தர மறுத்ததால் மகன் மின்சார கம்பத்தில் ஏறி பயமுறுத்தி உள்ளார்.

மன்யம் மாவட்டம் சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்த வெங்கண்ணா என்பவர் மதுவிற்கு அடிமையான நிலையில் புதுவருட தினத்தன்று அதிகளவில் மது அருந்தியுள்ளார். எனினும் இன்னும் அதிகமாக மது அருந்துவதற்கு பணம் இன்மையால் தன் தாயிடம் பணம் கேட்டுள்ளார்.

இதன் போது தாய் பணம் வழங்க மறுத்த காரணத்தினால் தாயை பயமுறுத்துவதற்காக அருகில் இருந்த மின்சார தூண் மீது ஏறியுள்ளார். இதேவேளை குறித்த சம்பவத்தை அவதானித்த உள்ளுர்வாசிகள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த இளைஞன் மின்சார தூண் மீது ஏறி அனைவரையும் பயமுறுத்தியுள்ளார். கீழே வரும்படி கோரியும் அவர் கீழே வராததால் மது அருந்துவதற்கு பணம் தருவதாக கூறிய பிரதேச மக்கள் குறித்த இளைஞனை கீழே வர வைத்துள்ளனர்.