மதுபான போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல்!

மதுபான போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய ND-9941  இலக்க பேரூந்து மீது நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில்  இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பேரூந்து நடத்துனர் ஒருவரால் பியர் போத்தல் மூலம் பேரூந்துக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட நபர் பொதுமக்கள், பயணிகள், சாரதி மற்றும் நடத்துனரால்  பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பியர் போர்த்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
சாரதி, பேரூந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேரூந்தை நிறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்