மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றமை தொடர்பான தகவல்கள் இன்று மாலைக்குள் வெளியிடப்படும்!

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் தொடர்பான தகவல்கள் இன்று புதன் கிழமை மாலைக்குள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும்,  என அரசாங்கம் தரப்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று புதன்கிழமை முற்பகல் 9.30 முதல் இடம்பெற்று வருகின்றது

இதன்போது உரையாற்றிய இலங்கை தழிரரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு அரசாங்க தரப்பில் இவ்வாறு பதில் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்த தேர்தலில் மதுபான சாலை அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவோம் என சொல்லியிருந்தது எனினும் இதுவரையில் குறித்த விடயம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் இரா சாணக்கியன் கேள்வி எழுப்பிய போது மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் தொடர்பான தகவல்கள் இன்று மாலைக்குள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.