
மதுபானங்களின் விலை குறைப்பு?
மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டி காட்டினார்.
இதேவேளை பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்று ஆண்டு காலமாக மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடவில்லை எனவும், நாடு தற்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுள்ள நிலையில், இம்முறை சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
