மதவெறுப்புப்பேச்சு : நடவடிக்கை எடுப்பதற்கு முறைப்பாடு வரை காத்திருக்கத் தேவையில்லை

-கொழும்பு-

மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியதாக மதப்போதனைகளைத் திரிபுபடுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்வரை விசாரணை அமைப்புக்கள் காத்திருக்கத் தேவையில்லை என்று சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்தினம் அறிவுறுத்தியிருக்கிறார்.

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன தன்னைச் சந்திக்கவந்தபோதே சட்டமா அதிபர் இதைக் கூறியிருக்கிறார்.

மதப் போதனைகளைத் திரிபுடுத்தும் சம்பவங்கள் குறித்து அறியவந்தவுடனேயே விசாரணை அமைப்புக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கலாம். முறப்பாடுகள் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டிய அலசியம் இல்லை.

மதவெறுப்பைத் தூண்டும் வகையிலான சம்பவங்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்கக்கூடியவர்களை கண்டறிந்து நீதிமன்றங்களின் உத்தரவைப் பெற்று விசாரணை அமைப்புக்கள் உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கமுடியும் என்பதே சட்டமா அதிபரின் அறிவுறுத்தலாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்