மதரஸாவில் உயிரிழந்த காத்தான்குடி சிறுவன் : சிசிடிவி தொழில்நுட்பவியலாளரின் வாக்குமூலம்

-அம்பாறை நிருபர்-

மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிடிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்தார்.

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸத்து சபீலீற் றஷாத் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த 13 வயது மாணவன் மீட்கப்பட்ட;hர்.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்ட மதரஸாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளி தொடர்பான விசாரணையின் போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிசிடிவி தொழிநுட்பவியலாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சம்பவ தினத்தன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் சிசிடிவி தொழிநுட்பவியலாளரான எனக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து எல்லாவற்றையும் வன்பொருள்(ர்யுசுனு னுஐளுமு) அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு நான் என்னால் வரமுடியாது என மௌலவியிடம் கூறி விட்டேன்.அத்துடன் வன்பொருள் (HARD DISK)   ஏன் அவற்றை அழிக்க வேண்டும்.என கேட்டதற்கு அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.பின்னர் இரவு 11 மணியளவில் மாணவன் இறந்த பின்னர் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

அந்த வேளை எனது சகோதரர் நாங்கள் சிசிடிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.

நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் என சகோதரரை கேட்டேன்.அப்பாடசாலையில் சிசிடிவி வன்பொருள் (HARD DISK)   காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதுடன் வன்பொருள் (HARD DISK)   அதனை அங்கிருந்து அகற்றி செல்லுமாறு பதற்றத்துடன் கூறினார். அத்துடன் 1000 ரூபா காசும் கொடுத்து 3 நாளைக்கு பின்னர் வன்பொருள் (HARD DISK)   வந்து பொருத்தி தருமாறும் எனது சகோதரரிடம் மௌலவி கூறி இருக்கிறார்.

அத்துடன் சம்பவம் இடம்பெற்று பதற்றம் நீடித்து இருக்கின்ற நிலையில் மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எனடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார்,  என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காத்தான்குடி சிறுவன் மதரஸாவில் சடலமாக மீட்பு : நிர்வாகி பொலிஸாரால் கைது (படங்கள் இணைப்பு)

காத்தான்குடி சிறுவனின் மரணம் விட்டுச் சென்ற பல தடயங்கள் : 3 மணித்தியாலங்கள் ஏன் காலதாமதம் ?