மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலை புதுமுக புகுவிழா

 

மட்டக்களப்பு  மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் புதுமுக புகுவிழா மற்றும் பாலர் பாடசாலை திறப்பு விழா ஆகியன அகரம் பாலர் பாடசாலை தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு ராமகிருஸ்ணமிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் ஜி கலந்து கொண்டார்.

அத்துடன் சிவசிறி கிரிதரக்குருக்கள், மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை அதிகாரி பா. சந்திரகாந்தன், கிராமசேவை உத்தியோகத்தர்களான திருமதி தயனி கிருஸ்ணாகரன், டிலக்சன், ஓய்வு நிலை ஆசிரியை ஜயந்தி, சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இவ் வருடம் புதிதாக பாலர் பாடசாலைக்கு இணைந்து கொண்ட மாணவர்கள் மலர்மாலை அணிவித்து கோலாட்டம், கும்மி ஆகிய நடனக்கலைஞர்களால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

இங்கு சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.