-நுவரெலியா நிருபர்-
நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி அனர்த்தத்தின் போது, வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில், மொத்தமாக நான்கு வாகனங்கள் புதைந்தன, அவற்றில் சில வாகனங்களை இன்றுவரை மீட்டெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றன.
இந்த மண்சரிவில் புதையுண்டு எட்டு பேர் உயிரிழந்தனர், இவர்களின் உடல்களை நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் சில நாட்களுக்குப் பிறகே மீட்கப்பட்டன, மீட்பு பணியின் போது இடையூறு ஏற்படும் வகையில் அடிக்கடி மழையும் பெய்து வந்த காரணத்தால் இவ்வாறான நிலை காணப்பட்டது.
இன்றுவரை மீட்க முடியாத வாகனங்களின் மேல் பாரிய கற்பாறைகள் காணப்படுவதால், அவற்றை சிறிது சிறிதாக அப்புறப்படுத்தி வாகனத்தில் உள்ள சேதமான பாகங்களை மாத்திரம் மீட்டெடுக்க கூடியதாக உள்ளது, என மக்கள் தெரிவிக்கின்றனர்.
