மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சு
மணமேடையில் துப்பாக்கியால் சுட்ட மணமகளை தேடி பொலிஸார் வலைவீச்சு
வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்ட பெண்ணை பொலிஸார் தேடி வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பெண் ஒருவர் தனது கணவரின் அருகில் அமர்ந்து நான்கு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
இதனை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள குறித்த பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்