
மட்டு.வைத்தியசாலையில் : ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணி என்ன?
மட்டக்களப்பில் வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது என சில நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னணியில் பல ஊழல்கள் இருப்பதாக சந்தேகங்கள் மக்கள் மத்தியிலும் வைத்தியசாலை வட்டாரங்களிலும் இருந்து வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக வைத்தியசாலையின் நிலைமையையும் அங்குள்ள நோயாளர்களின் நிலைமை தொடர்பிலும் ஆராய எமது செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் வைத்தியசாலைக்கு சென்ற போது ஊடகவியலாளர்களை வைத்தியசாலையினுள் அனுமதிக்கவில்லை.
வைத்தியசாலை வாசலில் நின்ற காவலாளி ஊடகவியலாளரை தடுத்து எமது வைத்தியசாலை நிர்வாகம் ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
இவ்விடம் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணனை தொடர்பு கொள்ள முயற்சித்து தொலைபேசி அழைப்பெடுத்த போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இவ்வாறு ஊடகவியலாளரை அனுமதிக்க மறுத்தமையானது வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னணி ஊழல்கள் இருப்பதாக ஏற்படும் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.
