மட்டு.வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்