
‘மட்டு முயற்சியாண்மை – 2023’ பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘மட்டு முயற்சியாண்மை – 2023’ உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர்களான சியாஹூல்ஹக், பிரசந்தன் லக்சண்யா, பிரதேச செயலக கணக்காளர் சி.புவனேஸ்வரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான கணேசமூர்த்தி ஜெயராஜினி மற்றும் சி.பிரணவசோதி, கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன், மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்களான தே.கிருஷ்ணவேணி மற்றும் ஆர்.ஜசோதா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறு தொழில் முயற்சியாளர்களினால் 30 இற்கும் அதிகமான கூடாரங்களில் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, இக் கண்காட்சியில் கலந்து கொண்டோர் பெருமளவான உற்பத்திப் பொருட்ளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது.




