மட்டு. மாநகரசபையால் திராய்மடு பகுதியில் வீதி செப்பனிடும் நடவடிக்கை!
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வட்டாரங்களில் வீதிகளை செப்பனிடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
அதன்படி மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் வீதி செப்பனிடும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
குறித்த வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான திருமதி தயாளகுமார் கௌரியின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த வீதி செப்பனிடும் நடவடிக்கை இடம்பெறுவதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர், ஆணையாளர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.