மட்டு. மாங்காட்டில் விபத்துக்குள்ளான டொல்பின் வாகனம்:இருவர் காயம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வழித்தடத்தினூடாக மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை நோக்கி மாங்காடு பிரதேசத்தை ஊடறுத்து பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வாகனம் இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் மாங்காடு ஹிபேஸ் திரைப்படமாளிகைக்கு அருகாமையில் விபத்துக்குள்ளாகியியுள்ளது.

குறித்த வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த டெல்பின் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி வீதியோரம் தொலைத்தொடர்பு இணைப்பிற்காக நடப்பட்டிருக்கும் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் டொல்பினின் முன்பகுதி சிதைவடைந்துள்ளதுடன் டொல்பினின் முன் பகுதியில் அமர்ந்து பயணித்த இருவருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் முன்னெடுத்துச்செல்கின்றனர்.