மட்டு.போதனா வைத்தியசாலையில் நிலவும் புற்றுநோய்க்கான மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு!

மட்டு.போதனா வைத்தியசாலையில் நிலவும் புற்றுநோய்க்கான மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் புற்றுநோய்க்கான மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இன்று புதன்கிழமை பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரனின் ஒருங்கமைப்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் அமைச்சர் ஹந்து நெத்தி தலைமையில் இடம்பெற்றது

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க. பிரபு இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நாங்கள் அறிந்தோம். அதனை எமது அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

இந்த மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து தருவதாக அமைச்சர் எம்மிடம் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் க.பிரபு தெரிவித்தார்