மட்டு.நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலையானது இன்று பி்.ப 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் துஷ்யந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் ஸ்ரீவித்தியன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.