மட்டு நகர் பாலத்திற்கு அருகில் கேட்பாரற்று காணப்படும் சோதனை சாவடி

– சௌமினி சுதந்தராஜ் –

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள பூங்காவின் எதிரே காணப்படுகின்ற போக்குவரத்து பொலிஸாருக்காக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி பயன்படுத்தப்படாமல் காணப்படுவதுடன் இது சேதமடைந்தும் காணப்படுகின்றது.

மேலும் இந்த சோதனை சாவடி உடைந்து காணப்படுவதால் மழைக்காலங்களில் வேகமான காற்று வீசும் போதும் இவை பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

எனவே இந்த சோதனை சாவடி குறித்து கவனத்தில் எடுத்து அவற்றை அகற்ற வேண்டும் அல்லது பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்குமாறு உரிய அதிகாரிகளிடம் மக்கள் கேட்டுகொண்டுள்ளனர்.

இந்த பகுதி மாநகர சபை எல்லையினுள் அமைந்துள்ளதுடன் இது தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் மற்றும் மாநகர சபை கவனத்தில் எடுக்கவும்.

மட்டு நகர் பாலத்திற்கு அருகில் கேட்பாரற்று காணப்படும் சோதனை சாவடி

மட்டு நகர் பாலத்திற்கு அருகில் கேட்பாரற்று காணப்படும் சோதனை சாவடி

மட்டு நகர் பாலத்திற்கு அருகில் கேட்பாரற்று காணப்படும் சோதனை சாவடி

மட்டு நகர் பாலத்திற்கு அருகில் கேட்பாரற்று காணப்படும் சோதனை சாவடி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்