மட்டு.தாந்தாமலை பகுதியில் குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை, கண்டியநாறு பகுதி குளத்தருகில் இன்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுத்திருந்தனர்.

பொலிஸார் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது 180,000 மில்லி லீட்டர் பரலுடன் 20 வயதுடைய பன்சேனை, உன்னிச்சை பகுதியை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மேலதிக சுற்றிவளைப்பின் போது சுமார் கோடா பரல்கள், 12 வெற்று பரல்கள் கசிப்பு வடிப்பதற்காக பயன்படுத்தப்படவிருந்ததாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சோதனை நடவடிக்கையானது பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலமையில் பணிப்புரைக்கமைய கொக்கட்டிச்சோலை பொலீஸ் நிலைய பொலீஸ் அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதான சந்தேக நபருடைய சான்றுப்பொருட்கள் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.