மட்டு. செங்கலடியில் தபால் மூல வாக்களிப்பு

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருவதுடன் செங்கலடி பிரதேச செயலாக உத்தியோகத்தர்கள் வாக்களித்தனர்.

பிரதேச செயலகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகள் சார்பில் பிரதி நிதிகளும் , பெப்ரல் அமைப்பு சார்பான பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்