மட்டு.காரமுனை முஸ்லீம்களுடையது – சாணக்கியனுக்கு பதில் கொடுத்த ஹிஸ்புல்லா!

மட்டக்களப்பு காரமுனைக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது, சாணக்கியனுக்கு பிழையான தகவல்களை கொடுத்து பிழையாக வழிநடத்தியுள்ளார்கள், என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி, காரமுனை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், தனது நாடாளுமன்ற உரையின் போது கருத்து தெரிவித்திருந்தார்.

காரமுனை தமிழர்களுடைய பிரதேசம் என்றும், காரமுனையை பெரும்பான்மை சமூகத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கை தமிழரசுக்கட்சியினரே பாதுகாத்துள்ளதாகவும், இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாணக்கியனின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாவின் உரையின் முழுமையான காணொளி