மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் , களுவாஞ்சிக்குடி சந்தை மற்றும் அதனை அண்டிய சூழலிலும், பட்டிருப்பு வீதியின் பாலம் வரையாக கட்டாக்காலி மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளதாக , பொதுமக்களும் , வியாபாரிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட காலம் வரை கட்டுப்பாடுகள் சட்டங்கள்,அமுல்படுத்தப்பட்டாலும் சில நாட்களில் அது மாறுவதாகவும், இவ்வாறு தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகள் வருவதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், அதிகளவான வீதி விபத்துகள் ஏற்ப்பட்டு வருவதாகவும் மக்கள் வியாபாரிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இதனை கட்டுபடுத்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உரிய இறுக்கமான நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே தாம் தமது வியாபார நடவடிக்கைகளை தங்கு தடையின்றி முன்னெடுக்க முடியும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே போல் வீதிகளில் பயணம் செய்யும் போது கட்டாகாலி மிருகங்கள் வாகனங்களினை சேதப்படுத்துவதாகவும் வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.