
மட்டு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ விளையாட்டு நிகழ்வு
மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்பக்கல்விப்பிரிவு மாணவர்களின் “செயற்பட்டு மகிழ்வோம்” விளையாட்டு நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 8.30 முதல் 10.30 வரை இடம்பெற்றது.
மிகவும் சிறப்பான ஒழுங்குபடுத்தலுடன் பெற்றோர், பழைய மாணவர்கள், மாணவர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், பிரதம அதிதியாக உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி உமாபதி விவேகானந்தம் அம்மணி, ஆரம்பக்கல்விப்பிரிவு சிறப்பு அதிதிகளாக கோட்டக் கல்வி அதிகாரி T.ராஜ்மோகன், ஏறாவூர் பற்று – 1 EPSI இணைப்பாளர் S. மோகனதாஸ், சேவைக்காக ஆசிரிய ஆலோசகர் K.சிவராசா (செயற்பட்டு மகிழ்வோம்), பாடசாலையின் சிறந்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான ரா.ரக்ஸன், அ.ஜெருசன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திருமதி நிலோஜினி மோகன்தாஸ், நூலகப் பொறுப்பாளர் செல்வி மு.சீத்தா, பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பாடசாலையின் ஆரம்பக்கல்வி பகுதித் தலைவர் திருமதி கலாசெல்வி சந்திரசிறி, ஆரம்பக்கல்வி, இடைநிலை, உயர்தர ஆசிரியர்கள், பெற்றோர், ஆரம்பபிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.























மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

