
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று சனிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று, பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று, சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ மாமாங்கேஸ்வர பெருமான் தேர் உலா வந்தார்.
மேலும் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
