மட்டக்களப்பு வாழைச்சேனை கமநல பிரிவில் சிறுபோக வேளாண்மை அறுவடை விழா

-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கமநல பிரிவில்  செய்கை பண்ணப்பட்ட  சிறுபோக  வேளாண்மை  அறுவடை விழா இன்று திங்கட்கிழமை தவனைகண்டத்தில்    நடைபெற்றது.
வாகநேரி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கையில்  13000 மேற்பட்ட ஏக்கரில் விவசாய செய்கை பண்ணப்பட்டிருந்த வேளாண்மை அறுவடை விழா  வாகநேரி திட்ட முகாமைத்துவ குழு தலைவர்  சி.சன்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
அறுவடை விழாவில் அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், நீப்பாசன மாவட்ட பணிப்பாளர் ந.நாகரெத்தினம், பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ் விஸ்னுரூபன், கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் M.A. ரசீட்,  கே.ஜெயக்கந்தன், விவசாய  அமைப்புக்களின் தலைவர் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர் .
தவனை கண்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற பூசையினை தொடர்ந்து வேளாண்மை அறுவடை நிகழ்வுகள் இடம்பெற்று,  பின்னர் அடம்பயடி வெட்டவன் (மூக்கர்கல்) கண்டத்தில் அமைந்துள்ள அரிசி ஆலை மண்டபத்தில் அதிதிகள் உரை, அதிதிகள் கெளரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது .
இதன்போது உரையாற்றிய அரசாங்க அதிபர்,
 நான் கூடிய அளவில் இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவித்து வருகின்றேன் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அவர்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்பதில் கூடிய கவனம் எடுத்துள்ளேன்
விவசாயிகள் என்றால் முதியோர்கள் தான் அதிகம் இருப்பார்கள் இளைஞர்களும் முழு மூச்சாக இதில் ஈடுபட வேண்டும் என்பதை நான் விரும்புகின்றேன்
அனேகமான பிள்ளைகள் இருப்பதை விற்று  வெளிநாடு போகவேண்டும் என்றுதான் உள்ளார்கள், வெளிநாடு போவதை விடுத்து எங்கள் நாட்டினை நாமே முன்னேற்ற வேண்டும்.
 அப்போதுதான் நாங்கள் தேசிய நீரேட்டத்தில் இணைந்து கொள்ளலாம் அப்போதுதான் எங்கள் நாட்டின் பொருளாதார நிலையை உயரும்போதுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரமும் உயரும், என குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்