மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் பூட்டிய வீட்டிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் வீடொன்றில் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, 1ஆம் வட்டாரத்தில் உள்ள பஸார் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 55 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் பெண்ணின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
