மட்டக்களப்பு – வலையிறவு மடத்துப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு – வலையிறவு மடத்துப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.

ஆலய மகா கும்பாபிசேக நிகழ்வுகள், கடந்த வெள்ளிக்கிழமை, ஆலய பிரதம குரு, அருளானந்த சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில்
ஆரம்பமாகியது.

விசேட யாக பூசைகள் இடம்பெற்ற நிலையில், இன்றைய தினமும் நாளையதினமும் எண்ணெய் காப்பு இடம்பெற்றுள்ளது.

எண்ணெய் காப்பு சாற்றும்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.

இதேவேளை மகா கும்பாபிஷேகம், வருகின்ற திங்கட்கிழமை 16.06.2025 ஆம் திகதி இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

  • Beta

Beta feature