மட்டக்களப்பு- வடக்கு – கிழக்கு பிராந்திய முகாமையாளர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப்பை சேர்ந்தவரும், சிவிசி நிதிநிறுவனத்தின்( CBC Finance ) வடக்கு – கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஒருவர் கல்குடா பகுதியில் கடலில் குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கல்குடா யானைக்கல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்த செல்வநாயகம் பகிதரன் (வயது-39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

நண்பர்களுடன் நேற்று குளித்துக் கொண்டிருந்த போதே இவர் காணாமல் போயிருந்த நிலையில், குறித்த நபரை கல்குடா டைவர்ஸ் அணியினர் மற்றும் அக்கீல் அவசர உதவி குழுவினர் நேற்று 3 மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், அக்குழுவினரால் மீண்டும் குறித்த பகுதியில் இன்று திங்கட்கிழமை தேடியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்