
மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக பந்துல குணவர்தன உறுதி
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்இ வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு இன்று நண்பகல் 1 மணியளவில் விஜயம் மேற்கொண்டிருந்த போது ரயில்வே அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவையை ஆரம்பித்து தருவதாகவும் மட்டக்களப்பிலிருந்து மாஓயா வரையிலான பாதையை புதிதாக செப்பனிட்டு தருவதாகவும் புகையிரத நிலையத்தில் இருக்கும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்






