பணிப்பெண்ணாக கடந்த 2022ம் ஆண்டு வெளிநாடு சென்ற, மட்டக்களப்பு முனைக்காடு பகுதியைச் சேர்ந்த, இராசலிங்கம் யசோமலர் என்பவர், கடந்த ஒரு வருடங்களாக எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும், அவரை மீட்டுத் தருமாறும், அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வாறு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதுடன், தற்போது அந்த பிள்ளைகள் குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகளின் அரவணைப்பில் வாழ்கின்றனர்.
பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லாது வீட்டில் இருந்துள்ளார், இதனால் பிள்ளைகளின் கல்வி உணவு போன்ற விடயங்களில் சிரமத்தை எதிர்நோக்கியதன் விளைவாகவே குறித்த பெண் வெளிநாடு சென்றுள்ளார்.
தற்போது அவரை நாட்டிற்கு மீள கொண்டு வருவதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும், எதுவும் பலனளிக்கவில்லை, என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
எனவே, குறித்த பெண்ணை மீட்டு தருமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்