மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 50 பேருக்கு இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பு

ஜனாதிபதி ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது 2024 செயலணி தலைவரினால் முன் வைக்கப்படட கோரிக்கைக்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான வீடுகளை புனரமைக்க தலா 150,000 ஆயிரம் ரூபாயும், மலசல கூடங்களை புனரமைக்க 50000 ஆயிரம் ரூபாயும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டம் வறுமை கோட்டின் கீழ் வாழும் 150 வீட்டு பயனாளிகளும், மலசல கூடம் அற்ற 300பயனாளிகளும் அடுத்த வருடம் ஜனவரி நடுப்பகுதியில் செயன்முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 50 பேருக்கு இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கான பயண ஒழுங்குகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும், என தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்