மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று வியாழக்கிழமை காலை வேட்புமனு தாக்கல் செய்தது.
அதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா, கிட்ணபிள்ளை வதனகுமார், ராமைய்யா டில்லி ஜெயராணி, தம்பிராசா ஆனந்தராசா, அந்தோணிதிலீப் ராஜ்குமார், எதிர்மன்னசிங்கம் பரமதேவன், பாக்கியராசா பாஸ்கரன், ஸ்ரீகாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.