
மட்டக்களப்பு மாணவியை கடத்திய இளைஞன் கைது
14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர் .
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கிரான்குளத்தை சேர்ந்த மேற்படி மாணவியை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்ற திருகோணமலை குற்றவெளியைச் சேர்ந்த 17 வயது இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தி சென்று கொழும்பில் சில நாட்கள் தங்கி இருந்தபின் மீண்டும் சொந்த இடத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை திரும்பி வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
