மட்டக்களப்பு-மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

மட்/ பட்/ மாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் திருமதி. தவமணிதேவி குணசேகரம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திரு . எஸ் . சிறிதரன் , விசேட அதிதியாக திரு . பி . திவிதரன்( பிரதிக்கல்வி பணிப்பாளர்) , சிறப்பு அதிதிகளாக திரு . எ . பார்த்தீபன்( உதவி கல்விப் பணிப்பாளர்( ICT ) இணைப்பாளர் ( PSI ) , திரு டீ அபேவிக்ரம ( பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி களுவாஞ்சிகுடி) மற்றும் கௌரவ அதிதிகளாக கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விளையாட்டு கழகங்கள், ஆலையை பரிபாலன சபை, மீனவ சங்கத்தினர்கள் கலந்து சிறப்பித்தனர்

இதில் முதல் நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல், இடம்பெற்றது இதனை தொடர்ந்து நினைவு தூபி திறப்பு, நுழைவாயில் திறப்பு , கொடியேற்றம் இடம்பெற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டது, பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு பின்னர் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று இறை வணக்கத்துடன் ஆரம்பமானது

தொடர்ந்து ஆசியுரை, வரவேற்பு நடனம் இவரவேற்பு உரை , தலைமையுரை நிகழ்த்தப்பட்டது

பின்னர் மாணவி ஒருவரால் கவிதை வாசிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பாடசாலையில் புலமை பரீட்சை,  கா. பொ. த. சாதாரண தர பரீட்சயில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சிறப்பு அதிதி உரை இடம்பெற்றது பின்னர் கல்லூரி மாணவர்களால் செம்பு நடனம் நிகழ்த்தப்பட்டது

தொடர்ந்து விசேட அதிதி உரை கிராமிய நடனம் நூல் வெளியீடு,  நூல் ஆய்வுரை, நூலாசிரியர் உரை அதிபர்களை கௌரவித்தல், பல்லவி இசை நிகழ்ச்சி பிரதம அதிதி உரை இடம்பெற்று இறுதியாக நன்றியுரையுடன் இந்த நிகழ்வு நிறைவடைந்தது

இந்த நிகழ்வினை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் இணைத்து ஒழுங்கமைத்திருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்