
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை படிப்படியாக குறைந்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
அல்லது மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கிறது.
