மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளாராக மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் பிரதி தவிசாளராக அலையப்போடி வசிகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

20 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில், இரு கட்சிகளுக்கிடையில் போட்டி நிலவிய வேளையில் இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்வதென சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 10 வாக்குகளை மேகசுந்தரம் வினோராஜ் பெற்றுக்கொண்டதுடன், 09 வாக்குகளை சண்முகநாதன் கணேசநாதன் பெற்றுக்கொண்டார், 01 வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதன் போது தவிசாளராக மேகசுந்தரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டார் .

பிரதி தவிசாளருக்காக அலைப்போடி வசிகரன் மற்றும் கிருஷ்ண பிள்ளை வதனகுமாரும் போட்டியிட்டனர். இதன்போது 01 வாக்கு நிராகரிக்கப்பட்டது. 10 வாக்குகள் அலையப்போடி வசிகரன் பெற்றுக்கொண்டார், கிருஷ்ண பிள்ளை வதனகுமாருக்கு 09 வாக்குகள் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பிரதி தவிசாளராக அலையப்போடி வசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.