மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் விபத்து !

பொலநறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் மியான்குளம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 03 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்