
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நோயாளர் காவு வண்டி மின் கம்பத்தில் மோதியதில், ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த, நிந்நவூர் ஆதார மருத்துவமனைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியே, பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாரிய மின்கம்பத்தில் மோதியுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த விபத்தில் நோயாளர் காவு வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
