
மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று புதன்கிழமை நண்பகல் 2 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ பரவல் காரணமாக வீட்டின் அறை ஒன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் முக்கிய ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இது வரையில் கண்டு பிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
