மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவி வழக்கு : ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலையின் மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை வாய்மொழி மூலம்  துஷ்பிரயோகம்  செய்ததாக, தெரிவித்து குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மீது மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டிற்கு அமைய  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த போது குறித்த ஆசிரியர் தலைமறைவாகியிருந்ததாகவும் பொலிஸார் அவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி குறித்த ஆசிரியர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திபோது சந்தேகநபரை ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியரை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திபோது அவரை எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவித்து விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மாணவியின் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனின் நேர்காணல்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்