மட்டக்களப்பு பிரண்சிப் விளையாட்டுக் கழகத்தின் காலாசார விளையாட்டு விழா

மட்டக்களப்பு கோட்டைக் கல்லாறு பிரண்சிப் விளையாட்டுக் கழகத்தின் காலாசார விளையாட்டு விழாவானது கழகத்தின் தலைவர் சி.விஸ்வராஜா தலைமையில் கோட்டைக் கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

ஒந்தாச்சிமடம் விநாயகர் பாடசாலை மாணவர்களின் பாண்டு வாத்தியம் இசை முழங்க அதிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

கழகத்தின் 28 வது வருட நிறைவினை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழாவும், அனிக்ஸ்வராவின் இன்னிசை நிகழ்வும் இடம் பெற்றது.

இதன் போது ஆண்கள், மற்றும் பெண்களுக்கான ஒட்டப்போட்டிகள், கிடுகு இழைத்தல், சமநிலை ஒட்டம், கயிறிழுத்தல் போட்டி, தேங்காய் துருவுதல், வினோத உடைப் போட்டி, சாதனையாளர் கெளரவித்து பரிசில்கள் வழங்கப்பட்டது.

இப்பிரதேசத்தில் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம், வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜானக ஜெயரத்ன, மாவட்ட புள்ளிவிபரவியலாளர் த.ஜெய்தனன், கோட்டைக் கல்லாறு ஆலயங்களின் வண்ணக்கர் விநாயகமூர்த்தி மற்றும் பிரமுகர்கள், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்