மட்டக்களப்பு பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் பலி – வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மாவடிவேம்பைச் சேர்ந்த பாலச்சந்திரன் சுஜீவகுமார் (வயது-32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து நேற்று கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் சித்தாண்டியூடாக சென்று கொண்டிருந்த போது ,  தண்டவாளத்தில் விழுந்ததினால் புகையிரதத்தால் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மது போதையில் இருந்த இவர் புகையிரம் வருவதை கண்ட நிலையில் , தண்டாவத்தில் இருந்து எழும்ப முடியாத நிலையில்தான் விபத்தில் பலியாகியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் தந்தையினால் அடையாளம் காணப்பட்ட நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.