
மட்டக்களப்பு நாவற்காடு கிராமத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை
3 வெள்ளிப்பதக்கங்களை பெற்று நாவற்காடு கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் செல்வி சு.மயூரா.
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடாத்தப்பட்ட Open Meet விளையாட்டுப் போட்டிகளானது, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பல பிரதேசங்களில் இருந்து பல விளையாட்டு வீரர்கள் பங்குபற்றினர்.
மட்டக்களப்பு பிரதேசத்தையும், நாவற்காடு கிராமத்தையும் முன்னிலைப்படுத்தி நாவற்காடு கிராமம் சார்பாக செல்வி சு.மயூரா முன்குண்டு போடுதல், ஈட்டி எறிதல், பரிதி வட்டம் வீசுதல் ஆகிய 3 போட்டிகளில் 2ம் இடம் பெற்று, 3 வெள்ளிப்பதக்கங்களை பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
செல்வி சு.மயூரா விரைவில் நடைபெறவுள்ள மாகாண மட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
