மட்டக்களப்பு-நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

மட்டக்களப்பு-நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவானது கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

தொடர்ச்சியாக 24 நாட்கள் இடம்பெற்ற மண்டலாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை 1008 சங்குகளுடனான சரஷ்டநாம சங்காபிஷேகம் இடம்பெற்றது.

அதனை முன்னிட்டு, நாவற்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து மாபெரும் பால்குட பவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.